பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது... மதிமுகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி மதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.

இரண்டு தொகுதி அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை போட்டியிடும் கட்சிக்கு ஒரே சின்னம் கேட்டால் ஒதுக்க முடியும் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் அவர்களுக்கு பம்பரம் செல்லும் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

முன்னதாக பம்பரம் சின்னம் ஒதுக்கப்படாவிட்டால் வேறொரு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பட்சத்தில் அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக வேட்பாளர் வைகோ தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI refused request of bambaram symbol for mdmk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->