மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் - 10, ஈரோடு - 3, சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழக மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும் 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் உதவியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்கள் என சந்தேகப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் கடந்த 15-ம் தேதி  சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 15ம் தேதி 69 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dvac raid again thangamani homes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->