பெரியார் பெயரில் விமான சேவை - திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா.! - Seithipunal
Seithipunal


பெரியார் பெயரில் விமான சேவை தொடங்கலாம் என தமிழக அரசுக்கு திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் விலை 17 ஆயிரத்து 748 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த தொகைக்கு சிங்கப்பூருக்கே போக முடியும்.

தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார். எனவே, 'பெரி ஏர்' என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை நிறுவனத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமான டிக்கெட் கட்டணத்தையும், 'பெரி ஏர்' என்ற பெயர் கொண்ட விமானத்தின் படத்தையும் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA trp Raja suggest to peri air service


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->