இன்றே முடிவு! தொடங்கியது இறுதி பேச்சுவார்த்தை! ராகுலை சந்தித்தார் கனிமொழி!  - Seithipunal
Seithipunal


திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. 15 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு வருவதால் திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இதுவரையில் இந்த கூட்டணி  பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கின்றது. எளிதாக முடியும் எனக் கருதப்பட்ட நிலையில் பேச்சு இழுபறி நிலையில் இருப்பதால் திமுக தரப்பும் பரபரப்பாக இருந்து  வருகிறது. 

கலைஞர் கருணாநிதி இருந்தவரைக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கிருந்து பிரதிநிதிகள் திமுகவை தேடி வந்த நிலையில் தற்போது திமுக பிரதிநிதிகள் காங்கிரஸை தேடி சென்று உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து கூண்டில் சிக்கிய கிளியாக மாட்டிக்கொண்டது தான். இதிலேயே பின்னடைவை சந்தித்த திமுக தற்போது தொகுதி பங்கீட்டில் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 

ஏனெனில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கேட்க திமுக தரப்பில் முதலில் ஆறு தொகுதிகள் மேல் இல்லை என்று கூறினாலும், பின்னர் தற்போது 10 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை உறுதி செய்வதில் திமுகவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. திமுக பிரதிநிதியான கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் அஹமட் படேல், ப சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் உடன் இருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress coalition final stage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->