தே.மு.தி.க தஞ்சை மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம்: வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தெரிவித்து தே.மு.தி.க தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராமநாதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ராமநாதன் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்தின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து இன்று அவர் நீக்கப்படுகிறார். 

இவர்களுடன் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தே.மு.தி.க கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி. செங்குட்டுவன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். 

இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், ஊராட்சி கிளை கழகம், கழகச் சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தே.மு.தி.க வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Thanjavur District Secretary Dismissal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->