அ.ம.மு.க குக்கர் சின்னத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டி? டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி பதி ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் தினகரன் செய்தார்.

இதைத்தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருப்பது தெளிவாக தெரியா வந்துள்ளது. அம்மாவின் பெரும்பாலான தொண்டர்களும் எங்கள் கட்சியில் தான் இருக்கிறார்கள்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க  வெற்றி பெறும். இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அதிமுக பெரிய வெற்றியை பெறப் போவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் சின்னத்துக்கு முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran says parliament election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->