சாக்கடையில் கான்கிரிட் : மக்களிடம் பேட்டியெடுக்க விடாமல் செய்தியாளர்களை தடுத்த திமுக பிரமுகர்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாநகராட்சி பகுதியில் அவசர கதியில் சாக்கடை கால்வாயில் கான்கிரீட் கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, திமுக பிரமுகர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், மழை வடிகால் மற்றும் வடிகால் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட நிலையில், அந்த கால்வாயில் தரைதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி இருக்கும் போதே கான்கிரிட்டை கொட்டி சென்ற காட்சிகள் அடங்கிய காணொளி சமூக தலைமையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகளிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். அப்போது திமுக மாவட்ட பிரதிநிதி ஒருவர் செய்தியாளர்களை தடுத்து நிறுத்தத்தில், "தேவையில்லாமல் செய்தியை வெளியிடக் கூடாது" என்று மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது சம்பவ இடத்திலிருந்த மேயர் உள்ளிட்டவர்கள் திமுக பிரமுகரை சமாதானம் செய்து செய்ய முயற்சித்தனர். இருப்பினும் செய்தியாளர்களிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம் செய்த அந்த காணொளி தற்போது பிரபல செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Concrete in drain DMK leader stopped journalists


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->