சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை காலி செய்யும் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட திமுக! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகளில் எப்போதும் இடம்பிடிக்கும் தொகுதி சிதம்பரம் தொகுதி. இந்த தொகுதியை தனக்கு மட்டுமே என குத்தகை எடுத்திருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் இதே தொகுதியில் 5 ஆவது முறையாக போட்டியிடுகிறார். இதில் அவர் 2009 ஆம் ஆண்டு மட்டும் வெற்றி பெற்றுள்ளார். 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகளின் சார்பில் திருமாவளவன் பானை சின்னத்திலும், அதிமுக சார்பில் சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்திலும், அமமுக சார்பில் சுயேட்சையாக பரிசுப்பெட்டி சின்னத்திலும் இளவரசன் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் எப்போதுமே போட்டியிடும் பாமக இந்த முறை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. 

இந்த தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே திமுக தலைவர் ஸ்டாலின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை ஒருமையிலும், தரக்குறைவாகவும் விமர்சனம் செய்து வந்தார். இது பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதற்கிடையே சிதம்பரம் தொகுதி பிரச்சாரத்திற்கு வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடையில் இருக்கும் போதே, எங்கள் அய்யாவை தரக்குறைவாக பேசினால் இங்கே நடமாடவே முடியாது என பாமக மாநிலத்துணை பொது செயலாளரும், பாமகவின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் தளபதியாக இருந்த வைத்தி பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து உக்கிரமான திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக நீலகிரியில் இருந்து ஆ ராசாவை வரவைத்து, அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கரை வைத்து பாமக நிறுவனரை விமர்சிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கூட்டம் அவசர அவசரமாக அரியலூரில் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே நடந்து முடிந்துவிட்டது. 

அரியலூர் கூட்டத்தில் ஆ.ராசாவையும், சிவசங்கரையும் மேடையில் வைத்துக் கொண்டு திருமாவளவன் பேச ஆரம்பித்தார். திருமாவளவன் பேசும் போது, மருத்துவர் ராமதாஸ் தன் சமுதாய இளைஞர்களுக்கு கற்று தந்ததெல்லாம் மரம் வெட்டுவதும், பெட்ரோல் குண்டு வீசுவதும் மட்டும்தான் என்று பேச அங்கிருந்த திமுகவினர், முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். 

அதே உள்ளரங்கில் அமர்ந்திருந்த சில திமுக வன்னிய தொண்டர்கள் மனதில் எழுந்த ஆதங்கம் யாதெனில், பாமகவை அரசியல் ரீதியாக தாக்காமல், பாமக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் வன்னியர்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள மரம் வெட்டியது பற்றி பேச திருமாவளவனுக்கு என்ன உரிமை உள்னது என வெளிப்படையாக பேச ஆரம்பிக்க சிவசங்கர், ராஜா அதிர்ச்சிடைந்தனர். மண்டபத்தில் இருந்த  கூட்டமும் வெளியேற ஆரம்பிக்க ஆ.ராஜா அலண்டு போனார்.

பாமகவை விமர்சிக்கட்டும், ஆனால் வன்னியரை விமர்சிக்க இவர்கள் எப்படி அனுமதிக்கலாம், அதற்கு மறுப்பு தெரிவிக்காத சிவசங்கர், ராஜா மீது கொந்தளித்த உடன்பிறப்புகள், தேர்தலுக்கு முன்னரே எங்களை கேவலப்படுத்தும் இவருக்கு எப்படி வாக்களிக்க முடியும், அதோடு அதனை எதிர்த்து கேட்காத சிவசங்கர், ராஜா இருவரையும் எப்படி நம்ப முடியும் என கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். 

டாக்டர் ராமதாஸை விமர்சிக்க ஆசைப்பட்டு, திருமாவளவனின்  பேச்சால் அது வன்னியர் எதிர்ப்பாக மாற, விழக்கூடிய வன்னியர் ஓட்டும் போச்சே என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நொந்து போயுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram vck leader spoke against vanniyar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->