சமூக வலைதளத்தில் எப்படி செயல்பட வேண்டும்! நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!   - Seithipunal
Seithipunal


இன்றைய மனிதர்களின் பொழுதுபோக்கில் பெரும் பங்கு வகிக்கிறது சமூக வலைத்தளங்கள், எதெற்கெடுத்தாலும் கேலி, கிண்டல் தான் என்ற நிலை தான் நீடிக்கிறது. 

சமூக வலைதளத்தில் யாரைப் பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்தப் பதிவையும் வெளியிடலாம் என்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாகக் கூறி  கடலூர் மாவட்டம் வீரமுத்து என்பவரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து உள்நோக்கத்துடனோ, ஆபாசமான படமோ பதிவு செய்யாத நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுவை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜரான காவல்துறை தரப்பு மனுதாரருக்கு எதிராக நடைபெறும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, யோசிக்காமல் தவறை செய்து விட்டு, பின்னர் மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.  யாரைப் பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்தப் பதிவையும் வெளியிடலாம் என்பதை ஏற்க முடியாது அதனால் அமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்ட மனுதாரர் வீரமுத்துவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court warn social media users


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->