பாஜகவின் தேர்தல் வியூகம்.! கொடியை ஏற்றி துவக்கிய அமித் ஷா.!! பதறும் எதிர்கட்சிகள்., பரபரப்பாகும் அரசியல்களம்.!! - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சியானது தீவிரமான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

தேர்தலில் பெரும் வெற்றி அடைவதற்கு பல யுக்திகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு பகுதியாக இந்திய முழுவதும் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். 

இதன் மூலமாக என் குடும்பம் பாரதிய ஜனதா குடும்பம் என்ற திட்டத்தின் மூலமாக., குஜராத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா தனது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இந்த திட்டத்தை தொடங்கினார். 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது., பாரதிய ஜனதா கட்சியின் கொடியானது வளர்ச்சி., நம்பிக்கை மற்றும் தேசியவாதத்தின் அடையாளமாகும். பாரத பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் தாஜா செய்தல்., சாதியம் மற்றும் குடும்ப ஆட்சியானது முடிவு கட்டப்பட்டுள்ளது. 

இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியானது வரும் மார்ச் 2 ம் தேதி வரை நடைபெறும். இந்த திட்டத்தின் மூலம் கட்சியின் கொடியை அவர்களின் இல்லத்தில் ஏற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக சுமார் 5 கோடி இல்லங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியானது ஏற்றப்படும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp plan to coming parliament election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->