பாஜகவிற்காக களமிறங்கும் பாகுபலி.! அதிர்ச்சியில் ராகுல் காந்தி., பீதியில் முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது அமோக வெற்றி பெற்று., பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசானது மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில்., அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட துவங்கியுள்ளன.

அந்த வகையில்., கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலைச்சர் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு., பிரதமர் மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்க்காக பெரும் பேரணியை நடத்தியது., அந்த பேரணியில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பிரதான அரசியல் தலைவர்கள் பங்கேற்று பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இந்நிலையில்., ஆந்திர மாநிலத்தை பொறுத்த வரையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியானது கூட்டணியில் இருந்து தன்னை விளக்கி கொண்டது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைத்து விட்டதாக கருதும் நிலையில்., அதனை சரி செய்து தேர்தலை வெற்றி பெறுவதற்கான பணிகளில் பாரதிய ஜனதா கட்சியானது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

அதற்கான ஒரு முயற்சியாக ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகரான பிரபாஸை பாரதிய ஜனதா கட்சிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சிக்கு நடிகர் பிரபாஸ் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்., மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையில் பிரபாஸின் மாமாவான கிருஷ்ணாம் ராஜுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்படாத நிலையில்., கூட்டணி குறித்த முடிவுகளை வெளியிடும் பட்சத்தில் அதற்கான அறிவிப்புகள் தெரியவரும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp introduce actor prabhas in andra election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->