தே.ஜ கூட்டணியில் ஓ.பி.எஸ்-க்கு‌ "1" தொகுதி.. வேட்பாளர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

அதன்படி, 

பாஜக போட்டியிடும் தொகுதிகள் : திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி.

தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதி கட்சிக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம் அரக்கோணம் தர்மபுரி ஆரணி விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் திண்டுக்கல் மயிலாடுதுறை கடலூர் ஆகிய பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிஎஸ் க்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் நேற்று ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அந்த தொகுதியில் தனிச் சின்னத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் ஓ. பன்னீர் செல்வம் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP allocated Ramanathapuram constituency to ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->