காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை தொகுதிகளா? அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் தற்போது உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கிட்டை உறுதி செய்துள்ளார் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ். 

முழுவதும் 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கிய கூட்டணியில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பேனர்ஜியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் பகவத் மானும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் இம்மாத இறுதியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து முதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள என்பது தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் 11 தொகுதிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் "காங்கிரஸ் கட்சியுடன் ஆன எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது இந்த போக்கு வெற்றி சமன்பாட்டுடன் முன்னேறும் இந்தியா அணியின் உத்தி வரலாற்றை மாற்றும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh Yadav announced 11 seats to Congress in up


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->