ஒரிஜினல் ஓ.பி.எஸ் யார்..? ராமநாதபுரத்தில் 5 பேர் இடையே கடும் போட்டி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மற்றொரு நபர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இன்று மேலும் 3 பேர் அதே பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு போட்டியாக மேலும் 4 ஓ.பன்னீர்செல்வங்கள் போட்டியிடுகின்றனர். 

வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இன்று மாலைக்குள் பரிசீலனை செய்து ஓ.பன்னீர் செல்வங்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

அதிமுகவின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக நான்கு பன்னீர் செல்வங்கள் களமிறங்கி இருப்பது தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 person nomination failed in Ramanathapuram as o paneerselvam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->