கோடை விடுமுறை வருவதால் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் என்று கவலையா.? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


விடுமுறை காலங்களில் குழந்தைகளை சமாளிக்க பெற்றோர் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இது போன்ற நேரங்களில் குழந்தைகளின் உடலுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும் வகையில் ஏதேனும் ஒரு கோடை கால பயிற்சி வகுப்புகளில் அவர்களை சேர்த்து விடலாம். எந்தெந்த கோடைகால பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என பார்ப்போம்.

 யோகா பயிற்சி : 
மனம் ஒருமுகப்படுத்தப்படவும் உடல் வலிமை பெறவும் யோகா பயிற்சி முக்கியமானது. குழந்தைகள் சிறு வயது முதலே யோகா பயிற்சியை கற்றுக் கொள்வதால் அவர்களது உடல்  உடல் பலம் மேம்படுவதோடு ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இது மன வலிமையும் அதிகரித்து ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்வதற்கு உதவுகிறது.

நீச்சல் பயிற்சி : 
குழந்தைகள் நீச்சல் பயிற்சியில் சேர்வதால் அவர்களது உடல் நலம்  மற்றும் ஆரோக்கிய மேம்படுவதோடு  தங்கள் உடலை காத்துக் கொள்ளக்கூடிய ஒரு தற்காப்பு கலையையும் பயில்கிறார்கள். நீச்சல் பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. எனவே குழந்தைகளை நீச்சல் பயிற்சியில் சேர்த்து அவர்களது விடுமுறை காலங்களை பயனுள்ளதாக மாற்றலாம் 

தற்காப்பு கலை பயிற்சி :
குழந்தைகளுக்கு விடுமுறை காலங்களில் அவர்களை தற்காப்பு கலை பயிற்சியில் சேர்ப்பதன் மூலம்  அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மனவலிமையும் அதிகரிக்கிறது. மேலும் இந்த கலைகளின் மூலம் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும்  இவை உதவுகின்றன.

விளையாட்டு பயிற்சிகள் : 
கிரிக்கெட், புட்பால் போன்ற   விளையாட்டுகளுக்கு கோடை காலங்களில் கேம்ப்புகள் நடத்தப்படும். அவற்றில் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம் அவர்களது விளையாட்டுகளைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கும் விளையாட்டுகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பதற்கும் உதவும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இவை தவிர ரோபோட்டிக் பயிற்சிகள், ஓவியப் பயிற்சி போன்றவற்றில் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம்  அவர்களது அறிவுத்திறன் மேம்படுவதோடு அவர்களது விடுமுறை காலங்கள் பயனுள்ளதாகவும் அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

useful tips for parents to make their kids summer holiays useful


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->