கோடையில் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்.! - Seithipunal
Seithipunal


கோடை காலம் வந்துவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. வெயிலோ மழையோ எதுவாக இருந்தாலும் முதலில் பாதிப்பு ஏற்படுவது சருமத்தில்தான். இதனை பாதுகாக்க தவறினால் பொலிவிழந்து சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வெயிலின் கொடுமையில் இருந்து சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

சருமத்தை பாதுகாக்கும் வழிகள் :

எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போல கலந்து தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். இதனால் உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். இவை உங்கள் முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.

சோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.

வேப்ப மரத்தில் இருந்து இலைகளை பறித்து அவற்றை குளிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து குளிக்கலாம். இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

குளிக்கும் நீரில் மாமர இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அந்த நீரில் குளிக்கவும். இதுபோன்று மா இலைகளைப் போட்டுக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்கலாம். கோடைகால சரும பாதிப்பு இருந்தாலும் விரைவில் மறைந்துவிடும்.

கோடை வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைத்து ஒற்றி எடுங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும்.

கோடைகாலத்தில் சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.

அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூசுவது நல்லதல்ல.

கோடைகாலத்தில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அதனால், முகத்தில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் சேராமல் தவிர்க்கலாம்.

கோடைகாலத்தில் உபயோகிக்க, அழகு சாதனப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அழகு சாதனப்பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது.

அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வெயில் காலங்களில் எல்லா வித சருமத்திற்கும் சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer health tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->