சுட்டெரிக்கும் வெயில் சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக கோடை காலங்களில் வெயிலை சமாளிப்பதற்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. இதனால் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். 

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், பீட்ரூட், கற்றாழை, மோர், இளநீர் போன்றவற்றை சாப்பிடுவதால் வெயிலின் தாக்கம் குறையும். 

இயற்கையாகவே தயிர் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது. ஏனென்றால் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும். 

மேலும் முகத்தில் தயிர் தடவி வருவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். வெயிலின் தாக்கம் கண்களில் இருக்கும். இதனால் வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைக்கும் பொழுது சூடு குறையும். 

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். அதேபோல் கற்றாழை உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

கற்றாழை ஜெல்லை முகத்தில் கருமையான இடங்களில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும். கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் முகத்தில் ஏற்படும் வீக்கம், பருக்கள் போன்றவை மறையும். 

தேங்காய் எண்ணெயை முகத்தில் பூசி வர சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். வறண்டு போகாமல் பாதுகாக்கும். எனவே வெயிலில் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணையை தேய்த்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

skin care tips in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->