எப்போது கடைகளுக்கு சென்றாலும் ஆம்லேட் வாங்கி உண்பவர்கள்., மாற்றத்திற்கு வீட்டில் இதனை செய்து பாருங்கள்...!! - Seithipunal
Seithipunal


முட்டை என்று கூறினால் விரும்பாத நபர்களே இல்லை., கடைக்கு சென்றவுடன் எந்த பொருட்கள் சாப்பிட்டாலும் அந்த ஆம்லெட்டை ஆர்டர் செய்து சாப்பிடாமல் வரும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் மிளகு முட்டை வறுவல் செய்யும் முறையை காண்போம்.

தேவையான பொருட்கள்: 

முட்டை - 4.,

மிளகு தூள் - சிறிதளவு அல்லது காரத்திற்கேற்ப., 

வெங்காயம் - 2 எண்ணம்.,

பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கேற்ப).,

உப்பு - தேவையான அளவு., 

மிளகாய் தூள் - தேவையான அளவு.

மிளகு முட்டை வறுவல் செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை அவித்துக்கொண்டு அதனை சரியான அளவு இருக்கும் படி பாதியாக நறுக்க வேண்டும். 

பின்னர் எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும். 

முதலில் வானெலியில் எண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானவுடன் சிறிது மஞ்சள் தூளை போட்டு நறுக்கி வாய்த்த முட்டையை பொறித்தெடுக்க வேண்டும். 

பின்னர் அதே வானெலியில் சிறிது கடுகு உளுந்து போட்டு தாளித்து., அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். 

நன்றாக வெங்காயம் வதங்கியவுடன் அதில் தேவையான அளவிற்கு மிளகு தூள் மற்றும் சிறிதளவு மிளகாய் தூளை போட்டு வறுத்தெடுக்கவும். இப்போது சுவையான மிளகு முட்டை வறுவல் தயார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare egg poriyal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->