முகம் பளபளக்க அத்திப்பழ பேஸ்பேக்.! எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


சத்துக்கள் அதிகம் இருப்பதால் அத்திப்பழத்தை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த நிலையில், இந்த அத்தி பழத்தை பேஸ்ட்டாக அரைத்து, நம் முகத்தில் அப்ளை செய்து கொண்டால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும். அதனை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம்

தேன்

தயிர்

செய்முறை:

அத்திப்பழத்தை தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி சுத்தமாக துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நாம் அரைத்து வைத்துள்ள, ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழிவிக்கொள்ளலாம். அப்படி நம் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, அழகான முகம் கிடைக்க உதவியாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make aththipazham face pack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->