செல்போன் டவர் வந்ததனால் அழிந்தது என்று நினைக்கிறோம்!!! ஆனால் உண்மை அது அல்ல... - Seithipunal
Seithipunal


பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்.

இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை. இது தான் நிதர்சனமான உண்மை.

எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது.  அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்.

நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்.

அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்கட்டி தொங்க விட்டோம்.

என்ன ஆச்சரியம் 20 வீட்டில்18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது.

நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள். உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்.

உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது.. நிலை இப்படி போனதற்கு ஓட்டுவீடு இல்லாதது ஒரு காரணம்.

மற்றொன்று சிறுதானிய ( கம்பு, ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி) விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம்.

அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள். அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும். அபுதாபியில் ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன.

நன்றி: முரளி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house sparrow count going abnormal rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->