சரும வறட்சியை தடுக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்! - Seithipunal
Seithipunal


சரும வறட்சி தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணை தடவிக் கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். 

பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஸ்கின் மாய்ஸ்டர் பயன்படுத்துவதன் மூலம் சரும வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். 

உதடுகளில் ஏற்படும் வறட்சியை போக்க இரு வேளை உதடுகளில் வெண்ணெய் பூச வேண்டும். ரோஜாப்பூ இதழ்களை பால் விட்டு அரைத்து தடவி வந்தாலும் வெடிப்பு ஏற்படாது. 

வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு டீஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெய், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அரைக்க வேண்டும். 

இதை முகத்தில் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். பாத வெடிப்பு வராமல் தடுக்க வாரம் ஒரு முறை நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு, ஷாம்பு சிறிதளவு கலந்து கால்களை அதன் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் நன்றாக கழுவி துடைக்க வேண்டும். வாழைப்பழம், தேன், பன்னீர் போன்றவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வறண்டு போகாமல் இருக்கும். 

பாசிப்பயறுடன் ஆரஞ்சு பழ தோல் மற்றும் பால் போன்றவற்றை சேர்த்து அரைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natural beauty tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->