பாப்-அப் கேமராவுடன் களமிறங்கிய விவோ வி15 ப்ரோ!! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட்போன் அதீத வளர்ச்சியடையும் நிலையில், தற்போது விவோ நிறுவனமும் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி, விவோ தனது வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த தகவலின்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் ஸ்பெஷல் எதுவும் காணப்படவில்லை.

தற்சமயம் வெளியாகி இருக்கும் இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், சந்தையில் கிடைக்கும் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களை விட, விவோ நிறுவனத்திற்கு முதல் மாடலாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். 

இதன் மைக்ரோ-ஸ்லிட் இன்ஃப்ராரெட் சென்சார் திரையின் மேல் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் முக்கிய சிறப்புகல் மோட்டோராய்டு செல்ஃபி கேமரா இருக்கிறது.

8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா ஒவ்வொரு முறை கேமரா ஆப் திறக்கும் போது தோன்றி, பின் தானாக மறைந்து கொள்கிறது.

இந்தவகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்கள் கொண்டே பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது.

ஆனால் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

அந்த சென்சார்கள் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கும். இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படும் என தெரிகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


 

விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்:

  1. 8 ஜிபி ரேம்
  2. 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
  3. 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.௦
  4. 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4 
  5. 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
  6. 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8 
  7. அட்ரினோ 630 GPU
  8. 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே
  9. 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
  10. டூயல் சிம் ஸ்லாட்
  11. ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
  12. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  13. டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

இந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.44,990 என நிர்ணயம் செய்யப்படட்டுள்ளது. ஜூலை 21-ம் தேதி முதல் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.


சிறப்பு சலுகைகள்:

  1. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ.4000 கேஷ்பேக்
  2. எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.5000 வரை தள்ளுபடி
  3. 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
  4. ஜியோ பயனர்களுக்கு ரூ.1950 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சர்கள்
  5. ஒருமுறை திரையை மாற்றி கொள்ளும் வசதி
  6. பைபேக் உத்தரவாதம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivo v15 pro


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->