இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த 2 சீனர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த 2 சீனர்கள் கைது.!

பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் மாவட்டம் ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இரண்டு சீனர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதையறிந்த போலீசார் விரைந்துச் சென்று இருவரையும் கைது செய்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ் குமார் மிஸ்ராப் பேசியதாவது, "சீன நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜாவோ ஜிங் மற்றும் எப்யூ காங். இருவரும் நேற்று இரவு இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்தியாவுக்குள் வருவதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்கள் நுழைய முயன்றதன் நோக்கம் என்னவென்றும் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, "கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் இதற்கு முன்பு கடந்த இரண்டாம் தேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அப்போது, அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டு, விசாவுடன் இந்திய எல்லைக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two chinese arrested for illegal entry on india


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->