திருப்பதி திருமலை தேவஸ்தான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இணையதள டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி திருமலை தேவஸ்தான ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான டிக்கெட்டுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள திருப்பதி ஒரு வைணவ தலமாகும். திருப்பதி இந்தியாவிலுள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள்.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் பெறுவதற்கு 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளும் வசதியாக விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிட உள்ளன.

இதை தொடர்ந்து டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் கலந்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirumala online ticket release today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->