திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் திமுக அமைதியாக வேடிக்கை பார்க்கிறது - அண்ணாமலை பகீர் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக தமிழக பாஜக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:- "பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.

இதனைக் காரணம் காட்டி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இந்தி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக. இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader annamalai tweet about cauvery river issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->