புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடைபெற பாதுகாப்பு குறைபாடு காரணமா? நினைத்ததற்கு மாறான அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல் குறித்து பல்வேறு விதமான அரசுக்கு ஆதரவான, எதிரான விமர்சனங்களை காண முடிகிறது.

குறிப்பாக 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் எந்தவிதமான பாதுகாப்பு சோதனையும் இன்றி பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் எப்படி அனுமதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை விமர்சனமாக முன்வைக்கின்றனர்.

இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பலரும் அறிந்து கொள்ளவில்லை. சி.ஆர்.பி.எப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மட்டும் தான் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அதேபோல வெடிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்திய ஆடில் அகமது தார் சென்ற வாகனம் திடீரென்று தேசிய நெடுஞ்சலையில் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைந்து விடவில்லை.

தற்கொலை படை தாக்குதல் நடத்திய வாகனம் அங்கிருந்த கிராமத்தை இணைக்கும் சர்வீஸ் ரோட்டிலிருந்து இடையில் புகந்த வாகனம் தான் என்பது தெரிய வந்துள்ளது. ஊடகங்களில் பரவலாக இந்த சம்பவம் நடைபெற்றது புல்வாமா மாவட்டம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் சம்பவம் நடந்த துல்லியமான இடம் பந்திபோரா என்ற பகுதி. இந்த பந்திபோரா முழுக்க முழுக்க  கிராமப் பகுதி ஆகும். 

பொதுமக்கள் அதிகம் நிறைந்த இந்த  பந்திபோரா கிராமத்தில் இருந்து தான் வெடிபொருட்கள் ஏற்றிய வாகனத்தை ஆடில் அகமது ஓட்டி வந்திருக்கிறான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்த பந்திபோரா கிராமத்துக்கு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த சர்வீஸ் சாலையில் இருந்து தான், வீரர்கள் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனத்தின் இடையில் புகுந்து இந்த தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் தான் பாதுகாப்பு படை வீரர்களின் கெடுபிடியும் சோதனையும் அதிகமே தவிர சர்வீஸ் சாலைகளிலோ அல்லது கிராம பகுதிகளிலோ பாதுகாப்பு படை வீரர்களின் கெடுபிடியோ அல்லது சோதனையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயன்படுத்திதான் இந்த தாக்குதலை தீவிரவாதி நிகழ்த்தி இருக்கிறான்.

பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கன்வேய் செல்லும்போது பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முன்பு தடை இருந்தது. அதே போல சர்வீஸ் சாலை மற்றும் கிராம பகுதிகளிலும் பாதுகாப்பு சோதனை என்பது முன்பு அதிகம் இருந்தது. ஆனால் அதற்கு பொதுமக்கள் மத்தியில் நீண்டகாலமாக எதிர்ப்பு இருந்ததால் சோதனை சாவடிகளில் பொதுமக்களின் வாகனத்தை நிறுத்துவதோ சோதனை செய்வதோ வேண்டாம் என நீண்ட மாதங்களுக்கு ராணுவத்தில் முன்பு முடிவு செய்யப்பட்டது. அதுதான் தற்போது தீவிரவாதிகளுக்கு வசதியாகவும் போய்விட்டது.

மற்றபடி பாதுகாப்பு மிகுந்த நெடுஞ்சாலையில் இவ்வளவு கிலோ வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு எந்தவிதமான சோதனையும் இல்லாமல் ஒரு வாகனம் எப்படி செல்ல முடிந்தது, இது பாதுகாப்பு குறைபாடா அல்லது சதியா என்றெல்லாம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. மக்களுக்காக விடுபட்ட பாதுகாப்பு சோதனையால் தான் 40 உயிர்கள் பறிபோய் உள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pulwama terrorist attack behind reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->