காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா ஆட கூடாது.!! பிசிசிஐ முடிவு.?!! - Seithipunal
Seithipunal


கடந்த வியாக்கிழமை காஷ்மீரில் துணை இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை இராணுவத்தினர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து உள்ளது. மேலும், இந்த தாக்குதலுடன் தங்களை சம்மந்த படுத்துவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஆட கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் சுரேஷ் பாஃப்னா, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.,க்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை  நடைப்பெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 16 ஆம் நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களின் போது மட்டும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்று வருகிறது. அதை தவிர மற்ற எந்த தொடர்களிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup ind vs pak match may be cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->