2047ல் இந்தியப் பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக உயரும் - முகேஷ் அம்பானி - Seithipunal
Seithipunal


இந்தியப் பொருளாதாரம் 2047ஆம் ஆண்டுக்குள் 13 மடங்கு அதிகரித்து 40 டிரில்லியன் டாலராக மாறும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது, இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் வளர்ச்சியடையும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியும் வாய்ப்புகளும் ஏற்பட்டும். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும். பெரிய வளர்ச்சியை எட்டும். 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா, 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு அதிகரித்து, 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியை அடையும். 

மேலும் பொருளாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா இடம்பெறும். பயோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்றும் வருங்காலங்களில் இந்தியாவின் அசுர வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நம்முடைய அழகான பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mukesh Ambani says India economy to grow to 40 trillion dollar by 2047


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->