மணிப்பூர் வீடியோ விவகாரம்.!! சிபிஐ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இநத சம்பவம் நடைபெற்று 77 நாட்களுக்க பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரிலும் எதிரொலித்து வருகிறது. மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று எதிர்க்கட்சிகள் கருப்பு ஆடை அணிந்து நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றன. மேலும் எதிர்க்கட்சிகளின் குழு மணிப்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூர செயலை செய்த ஒரு சிலரை மணிப்பூர் மாநில காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளால் ஏற்பட்ட நெருக்கடியில் காரணமாக மணிப்பூர் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MOH recommend CBI investigation in Manipur video issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->