அரசு இயந்திரங்கள் பாஜகவிற்கு சார்பாக செயல்படுகிறது - மம்தா பானர்ஜி குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 

இந்த நிலையில் தேர்தல் குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மத்தியில் ஆளும் அரசு கால்பந்து அரசாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் பாஜகவிற்கு சார்பாக செயல்படுகிறது. 

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த அவர் மோடி அரசிற்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். 

எது எப்படி இருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்து துடைத்து எறியப்படும். மக்கள் விரோத அரசிற்கு இந்தத் தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banarji speech about central government


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->