தொடரும் வரதட்சணை கொடுமை, தொடர்ந்து தொல்லை கொடுத்த கணவர், பெண் மருத்துவர் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்திய கணவனின் தொல்லை தாங்காமல் மனமுடைந்த பெண்மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, இவர் சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்தார்.அப்பொழுது கார்த்திக் என்பவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது  ரூ 25 லட்சம் பணம் , 45 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி நகைகளை போன்றவற்றை கார்த்தி குடும்பத்தாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணத்திற்கு பின்பும் வரதட்சணை கேட்டு  கார்த்திக் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் வெறும் சமூகத்தை சேர்ந்தவர் எனவும் கூறி அடிக்கடி அவரை புண்படும்படி பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்காக அதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இன்னர் மயங்கி விழுந்த அவரை  உறவினர்கள் மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து ஜெயஸ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

lady doctor commits suicide by dowry torture

செய்திகள்Seithipunal