இவ்ளோ அடம்பிடித்து, சபரிமலைக்கு போய் எதை நிரூபிக்கபோறீங்க! பெண்களை சராமரியாக விளாசிய காயத்ரி! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50  வயதிற்குட்பட்ட அனைத்து  பெண்களும் செல்ல அனுமதி வழங்கி  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றன. 

ஆனாலும் இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள அரசு அறிவித்தது.

இந்நிலையில் பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், பல பெண்களும் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துவருகின்றனர். சமீபத்தில் கூட சென்னையில் இருந்து 12 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து,கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினார்கள்.

இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல முயற்சிக்கும் பெண்களுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,“சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றிய பாரம்பரிய வழக்கங்களில் நம்பிக்கை இல்லாத பெண்கள் எதற்காக சபரிமலைக்கு செல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அரசியல் காரணங்களால் மட்டுமே அங்கு செல்ல அடம்பிடிக்கிறார்கள். இதனால் எதை நிரூபிக்கப்போகிறீர்கள்?. உங்களுக்கு அய்யப்பன் மீது நம்பிக்கை இருந்தால் பல வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுபோல் 50 வயது கடந்த பிறகு அங்கு செல்லுங்கள்.” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kayathri condomned to girls who try to go sabarimalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->