இந்திய இராணுவத்தின் மீது எந்த தவறும் இல்லை - தாக்குதலுக்கு 2 நாள் முன்பு புல்வாமா மாவட்ட மக்கள் செய்த சதிவேலை..? - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் உட்பட 44 வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 350 கிலோ வெடி பொருளை எப்படி கொண்டு சென்றிருக்க முடியும்..? அத்தனை பாதுகாப்பையும் மீறி  இந்த தாக்குதல் நடந்ததில் அரசு சதி வேலை செய்திருப்பதாக பிரிவினைவாதிகள் பலர், அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளவில்லை என்று இந்திய பாதுகாப்புதுறையை வசைபாடி வருகின்றனர்.

ஆனால் அங்கு நடக்கும் நிலை அப்படியே தலைகீழாக இருந்திருக்கிறது. தாக்குதல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே புல்வாமா மாவட்டம் பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது.

பிப்ரவரி 11 ஆம் தேதி புல்வாமா மாவட்டம் ரட்னிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து , அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி பொதுமக்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

அதேபோல் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது வேறு விதமாக சென்று விடும் என்று பின்வாங்கி விட்டனர்.

பிப்ரவரி 11 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இராணுவத்தின் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அப்போதே இந்திய இராணுவம் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட பொதுமக்களை ஒடுக்கி தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தால் இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது.

காஸ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் பலவும், உள்ளூர் மக்கள் சிலரின் ஒத்துழைப்புடனே நடைபெறுகிறது. இதனை அறியாமல் இன்னும் பலர், தேசத்திற்கு எதிரான விரோத கருத்துக்களை கூறி பிரிவினைவாதம் பேசி வருகின்றனர்.

தாய் நாட்டு பற்று இருந்தால் மட்டுமே ஒரு நாடு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும், என்றைக்கு பிரிவினைவாதம் தலை தூக்குகிறதோ அப்போது சிரியா போன்ற நாடுகளின் நிலை நமக்கு பாடம் புகட்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian military 2 days before attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->