பள்ளி மாணவிகளை மேலாடையை கழற்ற சொல்லி கொடுமைப்படுத்திய ஆசிரியர்.! மாணவிகள் எடுத்த அதிரடி முடிவு., வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பெண்களுக்கு எதிராக பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. பல கீழ்த்தர எண்ணம் கொண்ட கொடூரர்களால் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் பெண்கள் மற்றும் பணிக்கு சென்று வரும் பெண்கள் என்று இருந்த நிலையில்., ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் கூட இன்றளவில் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். 

பல தொடர் அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு வரும் சூழ்நிலையில்., பள்ளியில் நடைபெறும் கொடூரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பல பெண்களுக்கு தொடர் அநீதிகள் மற்றும் அத்துமீறல்கள் இழைக்கப்பட்டு வந்த நிலையில்., தற்போது வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பகுதியில் பிரபல நாடக கலைஞரான வினை வர்மா அங்குள்ள பகுதியில் நாடகப்பள்ளியை நடத்தி வந்துள்ளார். இவரிடம் நாடக கலையை கற்றுக்கொள்வதற்காக பல மாணவ மற்றும் மாணவியர்கள் தினமும் காலை ஆறு மணி முதல் 9 மணி வரை சென்று வருவது வழக்கம். 

இந்த சூழ்நிலையில்., கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருந்துள்ளார். அந்த சமயத்தில்., வகுப்பறைக்குள் வந்த வர்மா பள்ளியறையின் கதவுகள் மற்றும் ஜன்னலை தீடீரென அடைத்துவிட்டு., அனைத்து மாணவ - மாணவியர்கள் தங்களின் மேலாடையை கழற்றி வரிசையாக நிற்க கூறி ஆணையிட்டுள்ளார். 

இதனை ஏற்ற மாணவர்கள் அனைவரும் தங்களின் மேலாடையை கழற்றி வரிசையாக நிறக்கவே., அந்த சமயத்தில் அங்கிருந்த சக மாணவிகள் செய்வதறியாது திகைக்கவே., ஒரு மாணவி தனது மேலாடையை கழற்றி முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் மேலாடையை கழற்ற முடியாதென்று கூறவே., அவர்களை வெளியே செல்ல உத்தரவிட்டுள்ளான்.  

பள்ளியை விட்டு வெளியேறிய மாணவிகள் உடனடியாக இரகசிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக மறைமுக புகார் பெற்று., இது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hydrabed school teacher told to his girl student Drop off the shirt police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->