மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை பகிர்ந்து கணவன் செய்த கேவலமான செயல், வெளியான அதிரவைக்கும் காரணம் .! - Seithipunal
Seithipunal


மனைவியை விட்டு  பிரிந்து தனது காதலியுடன்சேர்ந்து வாழ்வதற்காக தனது  மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் கணவர் பகிர்ந்ததா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருபவர் துளசிநாத் .ஆஸ்திரேலியாவில்  பட்டப்படிப்பு முடித்து நாடு திரும்பிய இவர் தனது சொந்த ஊரிலேயே தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து  வந்தார்.

மேலும் திருமணமான நிலையில் துலசிநாத்துக்கும், அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மெளனிகா என்ற பெண்ணுக்கும் தொடர்பு  ஏற்பட்டது.
இதனால் துலசிநாத் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மெளனிகாவுடனே சேர்ந்து வாழ ஆசைப்பட்டார்.

இதனால் தனது மனைவிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அவரை தன்னை விட்டு விரட்ட மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை மெளனிகாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, மோனிகா அதை அவர் வாட்ஸ் அப் ஸ்டேடஸாக வைத்துள்ளார் , மேலும் இந்த பெண் பணத்துக்காக எதையும் செய்பவள் என மோசமாக வார்த்தைகளுடன் அந்த புகைப்படத்தை அனைவருக்கும் பகிர்ந்துள்ளார் .

அதுமட்டுமின்றி துலசிநாத்தும், மெளனிகாவும் சேர்ந்து மிகவும் கேவலமான  மெசேஜ்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த துலசிநாத் மனைவி இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து தீவிரவிசாரணை மேற்கொண்ட போலீசார் துலசிநாத் மற்றும்  மெளனிகா இருவரும்தான் இதை செய்தனர் என கண்டறிந்து அவர்களை  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

husband share his wife glamour photo

செய்திகள்Seithipunal