தீர்ப்புகள் பாடமாக இடம் பெறுவதன் மூலம் நீதித்துறையில் மாணவர்கள் இடம்பெறுவார்கள் - சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் பேச்சு..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் பேசியதாவது:- 

"கவர்னர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம், ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட் உட்பட 5 மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அதிகளவு பெண்கள் உள்ளனர். தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர்.

இதனால் வரும்காலத்தில் அதிகளவு பெண் வக்கீல்களும், நீதிபதிகளும் இடம்பெறுவார்கள். கடந்த காலங்களில் சுப்ரீம்கோர்ட்டில் ஒன்று அல்லது 2 பெண் நீதிபதி இடம்பெறுவதே அரிதாக இருந்தது. ஆனால் இப்போது 4 பெண் நீதிபதிகள் சுப்ரீம்கோர்ட்டில் உள்ளனர். 

வரும்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவார்கள். தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தீர்ப்புகளை பாடமாக வைத்துள்ளனர். அதேபோல சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும். அப்போதுதான் நீதித்துறை பணிகளில் மாணவர்கள் இடம்பெற வழிவகுக்கும்". என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government law college golden jublee closing ceremony puthuchery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->