ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ சோதனை.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு உள்துறை அமைச்சகமே காரணம் என குற்றம்சாட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.

இந்த நிலையில் அவர் ஆளுநராக இருந்தபோது ஜம்மு காஷ்மீரின் கிரு நீர்மின் நிலையத் திட்டத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் மீது எழுந்துள்ள புல்வாமா தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டிற்கு முக்கிய சாட்சியாக இருக்கும் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI raid in Jammu Kashmir former governor house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->