கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு.! - Seithipunal
Seithipunal


கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு.!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதாக இந்தியாவிற்கு வருகை தந்தனர். 

அந்த வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாநாட்டில் பங்கேற்பதாக இந்தியாவிற்கு வந்துள்ளார். நேற்று இந்த மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது நாடு திரும்பி வருகின்றனர். 

அதன் படி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், அந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு, அதனை சரிபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இதுதொடர்பாக, கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடா பிரதமர் செல்ல வேண்டிய சிஎப்சி 001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதை ஒரே நாள் இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள்" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada prime minister flight suffers in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->