பெங்களூருவில் தமிழக அரசு பேருந்து மீது தாக்குதல்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்தின் மீது நள்ளிரவு மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நேற்றிரவு சேலத்தில் இருந்து பெங்களூரு சேட்டிலைட் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. 

பேருந்து கே.ஆர் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியத்தில் பேருந்தின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது. 

இந்நிலையில் பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இருவருக்கு லேசான கீறல் ஏற்பட்டதால் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டு கத்தி கூச்சலிட்டனர். 

இது தொடர்பாக பேருந்து ஓட்டினர் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி கல்வீச்சு தாக்குதல் குறித்து சாம்ராஜ் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதல் காவேரி நீர் விவகாரத்தின் காரணமாக நடத்தப்பட்டதா அல்லது கர்நாடகா பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண சேவை வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெற்றதா என போலீசார் பல கோணங்களில் விசாரணை
நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Tamil Nadu government bus Attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->