பெங்களூரு தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் உள்ள தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

பெங்களூரு, கசவனஹள்ளி பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

2 நிறுவனங்களுடன் தொழிலதிபர் தொடர்புடையவர் என்றும் அந்த நிறுவனங்களில் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனராக பதவி வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் அதிகாரிகள் ஒரே சமயத்தில் 8 வாகனங்களில் வந்து தொழிலதிபர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த வாரம் முதல் இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமான பணம் வருமானவரி துறையினரால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பா.ஜ.க அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் கட்டினத்தை உயர்த்திய ஒப்பததாரருக்கு சொந்தமான குடியிருப்பில் ரூ. 40 கோடிக்கும் அதிகமான பணம் வருமானவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து கட்டடத் தொழிலாளியின் குடியிருப்பு பகுதியில் ரூ. 40 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் நிதிக்காக, 5 மாநிலங்களில் பணம் வசூலிக்கப்படுவதாக பா.ஜ.க மற்றும் ஜேடி கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru businessmen owned places enforcement department raided 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->