கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்.!! - Seithipunal
Seithipunal


பெண்ணானவள் வீட்டில் கர்ப்பிணியாக இருந்தால் அவரை அந்த குடும்பமே ஒவ்வொரு அசைவிலும் கவனித்து அவரையும் அவர்களின் எதிர்கால சந்ததியின் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான போட்டுக்காலை வழங்கி வருவார்கள். அந்த வகையில்., கர்ப்ப காலத்தில் சில விதிமுறைகளும் உள்ளது.

அந்த வகையில்., கர்ப்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது மற்றும் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்வது போன்ற விஷயங்களை செய்ய கூடாது. திறந்த வெளிகளில் படுத்துறங்கும் பழக்கத்தை வைத்திருக்க கூடாது. 

கருவுற்ற 10 வாரம் முதல் 16 வது வாரம் வரை கருச்சிதைவுகள் ஏற்படுவதற்கு மன உளைச்சலும் ஒரு முக்கிய காரணமாகும். இதனால் ஏற்படும் பயம்., பதற்றம் மற்றும் கோபத்தை அறவே தவிர்க்க வேண்டும். மசக்கையின் அறிகுறிகளின் காரணமாக வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுகிறது என்ற காரணத்தால் மாத்திரைகளை உட்கொள்ள கூடாது. 

இந்த காலத்தில் தாம்பத்தியம்., அதிகளவிலான எடையை சுமத்தல் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிதல்., இரவு நேரங்களில் தூங்காமல் கண்விழிப்பது., மலம் மற்றும் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பது மற்றும் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் அவர்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் அவர்களை பயமுறுத்தும் வகையில் சத்தமிட்டு எழுப்ப கூடாது. பகலில் அதிக நேரம் உறங்குவதால்., இரவு வேளைகளில் தூக்கம் வராமல் பாதிப்பிற்குள்ளாக வேண்டியிருக்கும். 

அதிகளவு பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் திரைப்படங்கள் மற்றும் பிற சம்பவங்களை காணுவது அல்லது நினைப்பது கூடாது. காது., மூக்கு., தொண்டை., கண் மற்றும் தோல் நோய்கள் போன்றவை ஏற்ப்படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies should avoid these


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->