கோடையில் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுவது.. உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.! - Seithipunal
Seithipunal


வெயில் காலங்களில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அதிகளவு உப்பை சேர்த்துக் கொள்ளாமல் வழக்கத்தை விட குறைவாக சேர்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால், அதிகப்படியான உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம் உடலில் இருந்து அது அதிகப்படியான நீர் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

காப்பி பொதுவாகவே சற்று உடலில் சூட்டை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருக்கும். இந்த காப்பியை வெயில் காலங்களில் எடுத்துக் கொள்வதால் இது நம் உடலில் அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்த்து விடுவது நல்லது. வெயில் காலங்களில் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது அவசியம்.

கோடை காலத்தில் பலரும் கூல்டிரிங்ஸ் குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த கூல்ட்ரிங்க்ஸில் அதிகப்படியான சோடா கலந்துள்ளது. இந்த சோடாவில் இனிப்பிற்காக அதிக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, இது நம் உடலில் நீர் இழப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, இதை கட்டாயம் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும். அதுவும் நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்ற காலங்களில் கூட இது போன்ற குளிர்பானங்களை எடுத்துக் கொள்வது மோசமான உடல் நிலையை ஏற்படுத்தக்கூடும்.

ஊறுகாயில் அதிகப்படியான சோடியம் இருக்கிறது. எனவே, இது நம் உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெயில் காலங்களில் ஊறுகாய் அதிகப்படியாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

கோடை காலத்தில் மது அருந்துவதால் உடலில் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இது நம் உடலில் வறட்சியை அதிகரித்து கல்லீரலை பாதிக்க வைக்கும். மேலும், கோடை காலங்களில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வது சிறுநீரக செயலிழப்பை விரைவுப்படுத்தும். எனவே, கோடை காலத்தில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

டார்க் சாக்லேட் மற்றும் அதிகப்படியான புரோட்டின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்க கூடியது. இதனால் செரிமான கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Please avoid these Items to Hydrated body


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->