கணுக்காலில் இந்த அறிகுறிகள் உள்ளனவா?.! கண்டிப்பாக செய்தி உங்களுக்குத்தான்.!! - Seithipunal
Seithipunal


 

தற்போது உள்ள பலர் அவர்களின் கால்கள் அதிகளவு வலிப்பதாக கூறுகின்றனர். அந்த பிரச்சனைகளுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளான., அந்த காரணங்களை காண்போம்.

பலர் நீண்ட நேரமாக நின்றுகொண்டு தங்களின் பணியை மேற்கொள்கின்றனர்., அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்துகொண்டு கால்களை அசைக்காமல்., நகர்த்தாமல் பணியாற்றுபவர்களுக்கு கால்களின் இரத்த ஓட்டமானது குறைவதன் காரணமாக கணுக்கால் நீர் தேக்கம் ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் நின்றுகொன்டு பணியாற்றும் சமயத்தில்., பலர் கால்களை தொங்கப்போட்டு உட்கார்ந்து பணியாற்றுகின்றனர். 

அவர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடங்களுக்கு நடந்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. மேலும் பலர் அணியும் காலணிகளை (சூ) இறுக்கமாக அணிவதன் காரணமாக கணுக்காலில் அதிகளவு வீக்கம் ஏற்பட்டு., கால்களில் கொப்பளம் ஏற்படும். 

இதன் காரணமாக இறுக்கமாக காலணிகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் உணவில் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் நபர்களுக்கு கணுக்கால் மற்றும் உடல் பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அது போன்று உடலில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

உடலளவில் அதிகளவு எடை கொண்டவர்கள் அதற்கென சில பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை கால்கள் தங்குவதற்க்கான வலிமையை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால் மற்றும் பாதத்தில் வீக்கம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. 

கணுக்காலில் ஏற்படும் வீக்கமானது இருதய பாதிப்பு., சோர்வு., அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற காரணத்தால் ஏற்பட வாய்ப்புள்ளது., ஆகவே இது போன்ற பாதிப்புகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HEAVY PAIN LEGS., WILL TO CONTACT DOCTOR


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->