கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் உலர்திராட்சை.! மலச்சிக்கலையும் தீர்க்கும்.! - Seithipunal
Seithipunal


பொதுவாகவே முதியோர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு உலர் திராட்சை ஒரு மிகச்சிறந்த மருந்து. அன்றாடம் இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 

இனிப்பாக இருப்பதால் இதை சாப்பிடலாமா என்று சர்க்கரை நோயாளிகள் யோசிக்க தேவையில்லை. ஏனெனில் இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைப்பதுடன் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இதில் தாமிர சத்துக்கள் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எலும்பு மஜ்ஜைகள் உலர் திராட்சை சாப்பிட்டால் வலுபெறும். அத்துடன் இதயத்துடிப்பும் இதனால் சீராக இருக்கும்.

கருவில் இருக்கின்ற குழந்தைகளுக்கு தாய் மூலமாகத்தான் அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. கர்ப்பிணிகள் பாலில் உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வருவதால் குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியமாக பிறக்கும். 
 
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த உலர் திராட்சையை 5 எடுத்துக்கொண்டு அதை பாலில் போட்டு காய்ச்சியோ அல்லது அப்படியே போட்டோ கூட சாப்பிடலாம். 
 
ரத்த சோகை இருப்பவர்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிடும்போது அவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்கும். 
இந்த உலர் திராட்சை மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்த உதவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dry graphs For pregnant ladies


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->