வெந்தய தேநீரை அருந்துவதால் நமது உடலுக்கு கிடைக்கும் அளப்பரிய நன்மைகள்.!! சகல பிரச்சனைகளுக்கு சகலகலா வல்லவனாய் வெந்தய தேநீர்.!!  - Seithipunal
Seithipunal


வெந்தய தேநீரை பருகுவதன் மூலமாக குடல்., உணவுக்குழாய் மற்றும் சிறுநீரகத்தில் கழிவுகளை தங்க விடாமல் நமது உடலில் இருந்து வெளியேற்றி., நமது உடல் நலத்தை பாதுகாக்கிறது.  

இன்றுள்ள பெரும்பாலான இளம் வயதுடையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியுறும் பிரச்சனையாக இரத்த சோகை பிரச்சனை உள்ளது. இதனை சரி செய்வதற்கும்., இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும்., சரிசெய்யவும் பயன்படுகிறது. 

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் உடல் வலியை எதிர்கொள்ளவும்., தசை பிடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடவும்., அந்த பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. 

உடலுக்கு வளத்தை சேர்க்கும் வெந்தய தேநீர் செய்வது எப்படி?.!! 

பருவமடையும் நிலையில் உள்ள பெண்கள் வெந்தய தேநீரை குடிப்பதன் மூலமாக ஹார்மோன் சுரக்கும் தன்மையும் ஊக்குவிக்கப்பட்டு., மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகுக்கும். 

குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையில் முதல் பிரச்சனையாக தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை என்பதே. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கும்., தாய்ப்பால் அதிகளவில் சுரப்பதற்க்கும் வெந்தய தேநீரானது உதவி செய்கிறது. 

உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் உயர் கொழுப்புகளை கரைத்து., நமது உடலை கல்லீரல்., இருதயம் மற்றும் இரத்த பாதிப்புகள் பிரச்சனையில் இருந்து காப்பதற்கும் வெந்தய தேநீர் உதவுகிறது. 

இதுமட்டுமல்லாது மலச்சிக்கல் பிரச்சனை., உடல் எடை தக்கவைப்பதற்கு., பசியின்மை., இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்., நெஞ்சு எரிச்சல் மற்றும் அல்சர் பிரச்சனைகள்., சர்க்கரை நோய் பிரச்சனை., கூந்தல் வளர்ச்சி மற்றும் பித்த நோய்கள் ஆகியவற்றிற்கு சரியான மற்றும் இயற்கையான தீர்வாக அமைகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daily to drink fenugreek tea to get this good things


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->