சுட்டெரிக்கும் வெயில்... அம்மை நோய் வராமல் தடுக்க சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் கோடை காலங்களில் பரவும் நோயும் தொடங்கிவிட்டது. 

இதனால் ஆங்காங்கே அம்மை நோய் பரவி வருவதால் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இருப்பினும் இந்த நோய் காற்றில் பரவும் என்பதால் பெரியவர்களுக்கும் எளிதில் பரவுகிறது. 

முன்கூட்டியே அம்மை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இயற்கையான முறையில் சில டிப்ஸ்களை பார்ப்போம். 

* வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அதிக அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. வெயில் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை முருங்கை பூ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

* இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். வேப்ப இலைக கிருமி நாசினியாக பயன்படுகிறது. இதனை குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். 

* இது வெரிசெல்லா என்ற வைரஸை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது. காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை காற்றில் பரவும் நோய்களை தடுக்கிறது.

 

* அதிலும் நீர் சத்து நிறைந்த சுரைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

* உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும். 

* சரும பராமரிப்பிற்கும் தயிர் மிகவும் உதவுகிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் நீர் ஏற்றமாக இருக்கும். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chicken pox prevent tips in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->