கோபத்தின் உச்சியில் உளறிகொட்டிய முக ஸ்டாலின்! அதிர்ச்சியில் திமுகவினர்!   - Seithipunal
Seithipunal


அதிமுக பாமக காட்சிகள் இடையே கூட்டணி அமைந்ததில் திமுகவினரை விட, திமுக தலைவர் மு க ஸ்டாலின் கதறல் தான் அதிகமாக உள்ளதாக அனைத்து தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. . 

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் இடையே பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பது யார் என்ற போட்டி கடுமையாக நடைபெற்றது. அதிமுக பாமக கூட்டணி தான் அமையும் என ஊடகங்கள் பேச ஆரம்பிக்க, அதுவரை அதுகுறித்து சிந்திக்காத திமுக, ஒரு கருத்துக்கணிப்பை மக்களிடையே அவர்கள் கட்சியை வைத்து எடுத்த போது எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. 

அவர்கள் கட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 5.3 சதவீத வாக்குகளைப் பெற்று இருந்தாலும் தற்போது வட தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு, சராசரியாக 22 சதவீத வாக்குகளை வைத்து உள்ளதாக  திமுகவினர் அறிக்கை கொடுக்க அதன் பிறகுதான் அதிர்ந்து போனது திமுக. 

அதுவரை பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வேலு, பொன்முடி போன்ற தலைவர்களை அழைத்துப் பேசிய மு க ஸ்டாலின் நாம் பாமக கூட்டணியில் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். இல்லை என்றால் வட தமிழகம் முழுவதும் காலியாகி விடும் என்று கூறியதையடுத்து தான் திமுக தரப்பில், பாமகவை கொண்டு வர  கடுமையாக முயற்சி செய்யப்பட்டது. 

மேலும் திமுக அது தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வழியாக பாமாவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்தது ஆயினும் அதனை தவிர்த்து விட்டு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. இதனால் அதிர்ச்சி அடைந்த முக ஸ்டாலின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது கடுமையான சொற்களால் பொதுக்கூட்டத்தில் விமர்சனங்களை பேசி உள்ளார்.

டாக்டர் ராமதாஸுக்கு வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை.. என  ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவரும் இந்த வெட்கம், மானம், சூடு சொரனை இல்லாதவர் என்று கூறுபவருடன் தானே கூட்டணி பேசினார். வரவில்லை என்ற அதிருப்தியில் இவ்வாறு பேசுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மேலும் ஒரு வருடமாக பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால், திமுக கூட்டணியில்தான் இருக்கின்றோம் என்று கதறிய திருமாவளவனை ஓரமாய் தூக்கி போட்டுவிட்டு, பாமக கூட்டணிக்கு தயார் என்றதும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது திமுக அவர்கள், இப்போது அதிமுக பாமக கூட்டணியை விமர்சனம் செய்வது வியப்பாக உள்ளது என விமர்சனங்கள் வந்துள்ளன. 

ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் காங்கிரஸோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். டாக்டர் ராமதாஸ் மீதான விமர்சனம் அவருக்கும் பொருந்தும் என்பதை அவர் அறிந்துள்ளாரா என்பது  அவருக்குத்தான் வெளிச்சம். பாமகவை உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக நம்பிக்கொண்டிருந்த தோழமைக் கட்சிகளை இதுவரை இணைக்காமல் காத்திருந்தார் மு க ஸ்டாலின். 

இதில் அதிர்ச்சி அடைந்து ஆந்திராவில் போட்டிபோட போவதாக சென்றுவிட்டார் திருமாவளவன். அதேபோல காத்திருந்த வைகோ பொது வேட்பாளராக நிற்கும் திட்டத்திற்கு சென்று விட்டார்.  கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது அந்த கட்சிகளை தான் திமுகதனது அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக வாங்கிய வாக்கில் பாதி அளவு கூட இந்த மக்கள் நல கூட்டு இயக்க கட்சிகள் வாங்கவில்லை என்பது தான் ஸ்டாலின் தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.  ஆனால் பாமகவிற்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் மட்டும்தான் ஓடியது கடைசிவரை கனி கைக்கு எட்டாமல் போய்விட்டது. இதே பாமக திமுக கூட்டணியில் இணைந்திருந்தால் ஸ்டாலின் எவ்வாறு பேசியிருப்பார், தோழமை கட்சிகள் என்னவாகியிருக்கும் என நினைத்தால் ஒரு நிமிடம் தலை சுற்றுகிறது. 

தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கூட, இந்த அளவுக்கு கடுமையான சொற்களை பயன்படுத்திருக்க மாட்டார்.  நாகரிகம், கண்ணியம் கருதி பேசியிருப்பார். ஆனால் அரசியல் நிலையே புரியதா திமுக தலைவர் ஸ்டாலினை வைத்துக்கொண்டு ரொம்பவே கஷ்டமாக இருப்பதாக திமுக தொண்டர்களே இணையத்தில் புலம்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk leader stalin local speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->