பெண்கள் மெட்டி அணிவதால் இவ்வளவு நன்மைகளா.? வாங்க தெரிஞ்சிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


இந்திய திருமணங்களில் ஆண், பெண் மெட்டி அணிவது திருமண சடங்காக கடைபிடிக்கப்படுகிறது.  ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள் மட்டுமே மெட்டி அணிந்த நிலையில், காலப்போக்கில் பெண்கள் மெட்டி அணிந்து வருகின்றனர்.

இதில், பெண்கள் மெட்டி போடுவதால் பல விதமான நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, பெண்கள் மெட்டி அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

எங்களது கர்ப்பப்பைகான முக்கிய நரம்புகள் கார் விரல்களிலேயே இருக்கிறது. இதில் வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுப்பதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கர்ப்பப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது. அதேபோல் கர்ப்பத்தின் போது ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை குறைக்கவும், கர்ப்பப்பையில் நீர் சமநிலையை வைப்பதற்கும் மெட்டி பயன்படுவதாக கூறப்படுகிறது.

பெண்கள் கால் விரலில் மெட்டி அணிந்து நடக்கும் பொழுது பூமியுடன் அழுத்தப்படுவதால் உடலில் உள்ள நோய்களை குறைக்கும் என கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியாமல் அதனை அப்படியே உருக்கி மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். அதேபோல் எந்த காரணத்தைக் கொண்டும் மெட்டியை காலிலிருந்து கழட்டக்கூடாது என பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of womens wear metti


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->