இன்றைக்கு இருப்பதெல்லாம் கோவில் தானா..? கருவறைக்குள் கற்சிலை இருந்தால் மட்டும் அது கோவிலாகி விடாது.. அதிர வைக்கும் ஆதிதமிழ் நுட்பம்..? - Seithipunal
Seithipunal


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற ஒரு அற்புதமான பழமொழி ஒன்று உண்டு. இது மிகவும் தொன்மையான, ஆனால் நம் முன்னோர்கள் அனுபவப்பூர்வமாகச் சொன்ன முதுமொழி!

பண்டைய காலங்களில், நம் முன்னோர்கள் ஒரு ஊரில் கோயில் கட்ட எண்ணும் போது, அந்த ஊரில் ஓடும் ஆற்றுக்குத் தெற்கே இதற்கான நிலத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த இடத்தில் சிறிது மண்ணைக் கிளறி விட்டு நவதானிய விதைகளைத் தூவி நீர் விடுவார்கள். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீர் விட்டு வர, விதைத்தவை முளை விடத் தொடங்கினால், அந்த இடம் சரியான இடமாகத் தேர்வு செய்யப் பட்டு பின் இங்கே கோயில் எழுப்பப் படும்.

தொடர்ந்து நீர் விட்டும் ஐந்து நாட்கள் கழித்து முளை விட்டால் அந்த நிலத்தை தேர்வு செய்ய மாட்டார்கள். நன்றாக விதை முளைத்த இடத்தைத் தேர்ந்தெடுத்து கோயில் கட்டப் பட்ட ஊரில் விவசாயம் செழிப்பாக இருக்கும்.

அந்த ஊரின் மண் சத்து மிக்கதாக இருக்கும். மேலும் அந்த இடத்தில் வீற்றிருக்கும் தெய்வம் அந்த ஊரின் விவசாய வளமையைக் குறையாமல் பாதுகாக்கும் என்ற ஆன்மீக ஐதீகம் உண்டு.

அந்தக் காலத்தில் விவசாயமே பிரதானம்! எனவே பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வருபவர்கள், குடியிருக்க எண்ணும் ஊரில் ஓடும் ஆற்றுக்கு தெற்கே கோயில் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அவ்விதம் இருந்தால், அந்த ஊரில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள். அதனால் தான் அதி தத்துவமான இந்த பழமொழி நமக்கு கிடைத்தது. தற்போதுள்ள கால கட்டத்திற்கு இப் பழமொழி பொருந்தாது.

இந்த விதிகளை தற்போது பெரும்பாலோனோர் பின்பற்றுவதில்லை.  என்று சொல்வதை விட, பின் பற்ற இயலாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வாழ்வியல் உண்மை.

ஆலயத்துக்குள் சென்று கடவுளை வழிபடும் முறைகளையும் கூட நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக அங்கு வீற்றிருக்கும் கடவுளின் திருநாமத்தைச் சொல்லி “எனக்கு உன் தரிசனம் வேண்டும்” என்ற வேண்டுதலுடன் உள்ளே நுழைய வேண்டும்.

கருவரையில் வீற்றிருக்கும் தெய்வத்தின் முகத்தைக் கண்டு முகம் மலர நமஸ்கரிக்க வேண்டும். கண்களைத் திறந்து அந்த தெய்வத்தின் திருமுகத்தைக் கண் குளிரப் பார்க்க வேண்டும். சுவாமி முன்பாக, எக் காரணம் கொண்டும் அந்த இடத்தில் கண் மூடிப் பிரார்த்திக்க கூடாது.

பின்பு சுவாமியின் வலக் கரத்தைக் கண்டு கும்பிட வேண்டும். அது அபயக்கரம். நமது துன்பத்தை சுவாமியிடம் முறையிடும் போது, “பயப்படாதே! நான் இருக்கிறேன்” தனது அபயக் கரத்தை நீட்டுவார்.

பின் சுவாமியின் இடது கரத்தைப் பார்த்து கோரிக்கைகளைச் சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். சுவாமியின் இடது கை, நாம் கேட்கும் வரத்தை அருளும் கை! பின் சுவாமியின் பாதங்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு.”விடை கொடுங்கள். சென்று வருகிறேன்.” ஏன்று விடை பெற்றுச் செல்ல வேண்டும்.

திரும்ப வரும் போது, கோயிலின் பலி பீடம், கொடி மரம் அருகே சென்று மண்டியிட்டோ, சாஸ்டாங்கமாகவோ கண் மூடிக் கும்பிட வேண்டும்.

கிழக்கு மற்றும் மேற்கு திசையை நோக்கியிருக்கும் ஆலயங்களில் வடக்கு முகமாக விழுந்து கும்பிட வேண்டும்.

கோயில் வடக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி இருந்தால், கிழக்கு முகமாக விழுந்து கும்பிட வேண்டும்.

-மதுரை ராஜா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Hindu temple, also known as mandir


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->