ஒரு வழியா பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியுதுப்பா.! வெங்கட் கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடருக்கு என்ற ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் என்ற தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மீனாவின் தங்கையின் திருமணத்தின் மூலம் பிரிந்த குடும்பம் கதிர் முல்லை வளைகாப்பில் இணையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரவர் எடுத்த முடிவில் தெளிவாக இருப்பதால் கதை களத்தில் அடுத்த என்ன திருப்பங்கள் இருக்கப் போகின்றன என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவர் இந்த சீரியலிலிருந்து விலகி ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற தொடரில் கதாநாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் வெங்கட்.

இது பற்றி பேசியிருக்கும் அவர்  வருகின்ற ஜூன் மாதம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவடைய இருக்கிறது. அந்தத் தொடர் முடிவதற்கும் புதிய சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முழுவதும் ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட் தான் நடிப்பார் என்று உறுதியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is Venkat response to Pandian Stores


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->